Connect with us

உங்க குடும்பத்தை கவனியுங்க.. போன உசிரு திரும்பி வருமா? உருக்கமாகப் பேசிய KGF யாஷ்

Yash

CINEMA

உங்க குடும்பத்தை கவனியுங்க.. போன உசிரு திரும்பி வருமா? உருக்கமாகப் பேசிய KGF யாஷ்

 

ஒரே ஒரு படம் தான். பத்து வருடங்களாக தான் பட்ட கஷ்டம் அனைத்திற்கும் மொத்தமாக பதிலடி கொடுத்து இந்திய சினிமாவையே வாய்பிளக்க வைத்தவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான KGF சாப்டர் 1,2 படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் யாஷ். அதுவரை பெங்களுரைத் தாண்டிச் செல்லாத கன்னட சினிமா உலகை இந்திய முழுமைக்கும் அறிய வைத்தார். பான் இந்தியா படமாக கே.ஜி.எப் உருவாக்கிய சாதனை கன்னட சினிமாவின் வெற்றிச் சரித்திரம்.

இதன்பிறகு யாஷ்-ன் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. எந்தப் பக்கம் பார்த்தாலும் VIOLENCE என யாஷின் புகழ் பாடிக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். ஆனால் தற்போது இந்த ரசிகர் பட்டாளமே இவருக்கு பெரிய தலைவலியைக் கொடுத்திருக்கிறது. நடிகர் யாஷின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

   

அந்த வகையில் ஜனவரி 8 அவரது பிறந்தநாளுக்காக கர்நாடகாவின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்த் (24), முரளி (20), நவீன் (20) ஆகிய மூவரும் நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு சூரனகி என்ற கிராமத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க முடிவு செய்தனர். அப்போது ஜனவரி 7 நநள்ளிரவில் அங்கிருந்து மின்கம்பம் ஒன்றில் ஏறி பேனரை கட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு உதவி செய்த மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட FATMAN.. ஆக்சிஜன் மாஸ்க்குடன் இருக்கும் வீடியோ வைரல்…

உயிரிழந்த ரசிகர்களின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் யாஷ் அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “ரசிகர்கள் என்னை முழுமனதாக வாழ்த்த வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்துங்கள். அதுவே எனக்கு போதுமானது. இதுபோன்ற துயரமான சம்பவங்கள் என்னுடைய சொந்த பிறந்தநாளைக் கண்டே பயம் கொள்ளச் செய்கின்றன. உங்களுடைய ரசிக மனப்பான்மையை இப்படி காட்டக் கூடாது.

இவ்வாறு அசம்பாவிதங்கள் நடந்தால் உங்கள் குடும்பத்தின் கதி என்ன? பண உதவி யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இறந்தவர்கள் வர முடியுமா? எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம். இனி பேனர்கள் வேண்டாம். தாய் தந்தையை மதித்து நற்பணிகள் செய்யுங்கள் அதுவே எனக்குப் போதும்..” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் யாஷ்.

ஆனால் ரசிகர்கள் திருந்துவதாக இல்லை. இன்னமும் தனது அபிமான நடிகருக்கு கட்அவுட், பாலபிஷேகம், பீர் அபிஷேகம், பட ரிலீஸ் நாளில் மொட்டை அடிப்பது போன்ற பிற்போக்குத் தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாகவே இருக்கிறது.

Continue Reading
To Top