திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட FATMAN.. ஆக்சிஜன் மாஸ்க்குடன் இருக்கும் வீடியோ வைரல்…

By Begam on ஜனவரி 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். இவர்  சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே.

   

திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து  வந்தனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்தனர். தற்பொழுது இவர் நிபந்தனை ஜாமீனுடன் வெளியில் வந்துள்ளார். தற்பொழுது இவர் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.

   

 

இந்நிலையில் ரவீந்தர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ‘தான் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நெஞ்சு வலி இருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும்’ கூறியுள்ளார்.

மேலும் ICU வில் ஒரு வாரம் இருந்து, தற்பொழுது ஆக்சிஜன் அதிகமாக  தேவைப்படுவதாகவும் , எனவே, அவர் ஆக்சிஜன் மாஸ்க் உடன் பிக் பாஸ் review செய்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம fatman க்கு என்னாச்சு..? என்று அதிர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…