என்னா மனுஷன்யா… சுத்தி இருக்கவங்க கஷடத்துல கைகொடுக்குற அந்த மனசு இருக்கே… நீங்க சூப்பர்ங்க விவேக்!

By vinoth

Published on:

சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனிப்பட்ட உடல் பாணியும் வசனம் உசசரிப்பும் இருக்கும். அதனை அடையாளமாக கொண்டு பலர் பிரபலமாகியுள்ளனர். ஆனால் தனது வித்யாசமான சிரிப்பையே தனது தனிப் பட்ட அடையாளமாக வைத்து சினிமாவில் கலக்கியவர் பிரபல காமெடி நடிகரான குமரிமுத்து.

பகுத்தறிவு வாதியான அவர் திராவிடர் கழகத்தில் பணியாற்றியுள்ளார். அதே போல திமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்துள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு மற்றும் விவேக் ஆகிய முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். குமரிமுத்துவுக்கு கொஞ்சம் மாறுகண். அதை வைத்தே அவரை பாடிஷேமிங் செய்யும் சில நகைச்சுவை காட்சிகளும் வந்துள்ளன என்பது தவிர்க்க முடியாத சோகமே.

   

நாகர்கோவிலில் பிறந்த இவர் கடந்த 1979 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரி பூக்கள்’ அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்தார் தான் குமரிமுத்து.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக 2009 ஆம் ஆண்டு வந்த வில்லு படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக நடிப்பதை நிறுத்தினார். இந்நிலையில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் விவேக் பற்றி அவர் சொன்ன ஒரு தகவல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

அதில் “எனக்கு என்னுடைய பெண்ணின் திருமணத்தின் போது பணத்தேவையில் இருந்தேன். அப்போது எனக்கு இலங்கையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது. அதற்காக எனக்கு 50 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். ஆனால் என்னோடு விவேக்கையும் அழைத்து வரவேண்டும் என கண்டீஷன் போட்டார்கள்.

என்னுடைய கஷ்டத்தை சொல்லி விவேக்கிடம் பேசினேன். அவர் எனக்கு 2 லட்சம் வாங்கித் தந்தால் வருகிறேன் என்று சொன்னார். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். இலங்கைக்கு இருவரும் சென்றோம். நிகழ்ச்சி முடிந்ததும் இருவருக்கும் பணம் கொடுத்தார்கள். விவேக் தான் வாங்கிய இரண்டு லட்ச ரூபாயையும் என்னிடம் கொடுத்து “உங்களுக்காகதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்துங்கள்” எனக் கூறினார். நான் நெகிழ்ந்துவிட்டேன்.