நடப்பு ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்களும், விஜய் சங்கர் 29 ரன்களும் எடுத்திருந்தனர். கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கட்டும், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்று இருக்கிறது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு இது வரலாற்று தோல்வி என்பதால் கடும்மையாக அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தோனியை தான் அதிகம் பேர் தாக்கி பேசி வருகின்றனர். கடைசியாக களமிறங்கி சில ஓவர்கள் மட்டுமே அவர் ஆட வருவதாகவும் பலரும் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படியான நிலையில் சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ள நிலையில் விஷ்ணு விஷால் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதை தவிர்த்து விட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது அராஜகம். ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்க வேண்டும். எந்த ஒரு விளையாட்டு வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவது இல்லையா? இது இப்போது ஒரு சர்க்கஸ் ஐ பார்ப்பது போல உள்ளது. எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல என்று நடிகர் விஷ்ணு விஷால் அதில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தோனியை மறைமுகமாக விமர்சித்து அவர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…