Categories: சினிமா

எம்ஜிஆரையே அழ வைத்த ரிக்ஷாக்காரன்.. மனம் நொறுங்கிப் போய் பொன்மனச் செம்மல் செய்த மிகப்பெரிய உதவி..!

Spread the love

இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் தான்  எம்ஜிஆர் இப்படியான நிலையில் ரிக்ஷாகாரர் ஒருவருக்கு எம்ஜிஆர் செய்த உதவி பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது 1960 காலகட்டத்தில் வடபழனியில் உள்ள ஸ்டூடியோக்களுக்கு வர வேண்டும் என்றால் லிவர்டில் உள்ள ரயில்வே கிராசிங்கை தாண்டி தான் வர வேண்டும். அப்போதெல்லாம் அங்கு பாலம் கட்டவில்லை. அங்கு நடிகர்களை பார்ப்பதற்காகவே எப்போதும் ஒரு கூட்டம் கூடிவிடும். அங்கே அருகில் ஒரு ரிக்ஷா ஸ்டாண்ட் இருந்தது. அப்படி ஒரு நாள் அந்த ரயில்வே டிராக்கை தாண்டி செல்லும்போது ரிக்ஷா ஸ்டாண்டில் முதியவர் ஒருவர் வருத்தத்துடன் அமர்ந்து கொண்டிருப்பதை எம்ஜிஆர் கவனித்தார்.

அங்கு அமர்ந்து கொண்டிருந்த முதியவர் பனிக்காலத்தில் குளிரில் நடுங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டு இருந்தார். இதனை கவனித்த எம்.ஜி.ஆர் ஐயா இந்த குளிர்காலத்தில் எதுக்கு இப்படி இங்க அமர்ந்து கொண்டே இருக்கீங்க என்று கேட்க உடனே அந்த ரிக்ஷாக்காரன், நான் ஒரு ரிக்ஷாகாரன் என்னுடைய வண்டி உடைந்து விட்டது, அதனை சரி செய்ய என்னிடம் பணம் இல்லை, வீட்டில் இருந்தால் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்பாங்க அதனால தான் இங்கே வந்து உட்கார்ந்துட்டு இருக்கேன். சக ஊழியர்கள் தினமும் மாலை நேரத்தில் இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் என ஏதாவது கொடுத்தாங்கன்னா அதை வச்சு வீட்டுக்கு அரிசி வாங்கிட்டு போவேன் என்று அந்த ரிக்ஷாக்காரன் எம்ஜிஆர் இடம் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு தான் சிறுவயதில் அரிசி வாங்கப்பட்ட கஷ்டத்தை நினைத்து எம்ஜிஆர் கண்களில் கண்ணீர் வடிந்தது. பின்னர் அந்த நபருக்கு ரிச்சா வாங்குவதற்கு வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு நீ புதிய ரிக்ஷாவை வாங்கிக் கொண்டு ஏவிஎம் ஸ்டூடியோவில் இருக்கும் என்னிடம் வந்து காட்ட வேண்டும் என கூறிவிட்டு எம்ஜிஆர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதன் பிறகு அந்த நபர் புதிய ரிச்சாவை வாங்கிக் கொண்டு அதில் முன்னும் பின்னாலும் எம்ஜிஆர் படங்களை ஒட்டியது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் என் தெய்வம் என்ற வாசகத்தையும் அந்த ரிக்ஷாவின் பின்னால் எழுதினார்.

அதன்பிறகு ரிக்ஷாவை எடுத்துக் கொண்டு ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு அவர் செல்ல அவரை அங்கு அனுமதிக்கவில்லை. அதன்பிறகு எம்ஜிஆர் காதுக்கு இந்த விஷயம் சென்று அவரை உள்ளே அனுமதிக்க கூறியதும் உள்ளே சென்று ரிக்ஷாவை காட்டிவிட்டு அந்த நபர் எம்ஜிஆரின் காலில் விழுந்து வணங்கினார். அதன்பிறகு இந்த ரிக்ஷாவை வைத்துக்கொண்டு உழைத்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்று என்று எம்ஜிஆர் அவருக்கு அறிவுரை கூறினார். இந்த சம்பவத்தை கண்ட ஸ்டூடியோவில் இருந்த அத்தனை பேரும் எம்ஜிஆரின் வள்ளல் தன்மையை கண்டு வியந்து ஆச்சரியத்துடன் நின்றனர்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago