இன்னும் 1 வாரம் தான் இருக்கு….!! வெறித்தனமான ஒர்க் அவுட்டில் இறங்கிய நடிகர் விஷால்…. வைரலாகும் மாஸ் வீடியோ….!!

By Devi Ramu on ஆவணி 23, 2025

Spread the love

பிரபல நடிகரான விஷால் நடிகை சாய் தன்சிகாவை திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்தார். வருகிற 29-ஆம் தேதி விஷாலுக்கு 48-வது பிறந்தநாள். அன்றைய தினத்தில் சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய உள்ள தேதியை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது. நடிகர் சங்க கட்டடத்தை கட்டிய பிறகு தான் தனக்கு திருமணம் என விஷால் அறிவித்திருந்தார்.

அந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தான் ஏற்கனவே சொன்னது போல விஷால் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் விஷால் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மதகஜ ராஜா திரைப்பட பிரமோஷனில் கலந்து கொண்ட விஷாலுக்கு கைகள் நடுங்கியது.

   

இதனால் அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அப்போதிலிருந்தே அவர் உடல் நலம் சரியாக பழையபடி வரவேண்டும் என ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது விஷாலின் ஒர்க் அவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

   

 

View this post on Instagram

 

A post shared by Ignite101 (@ignite101_india)