Categories: சினிமா

9 வருஷம் ஆச்சு, என்னோட கல்யாணமும் நடக்கணும்… ஒரு வழியா திருமண தேதி குறித்த விஷால்..!

Spread the love

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் விஷால். சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த 12 வருடங்களுக்கு முன்பு ரிலீசாக வேண்டிய மதவச்ச ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. 50 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் கடந்த நிலையில் அடுத்து விஷால் படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே சமயம் விஷால் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் காக வந்திருந்த சமயத்தில் மைக்கு பிடித்த அவர் கைகள் நடுங்கிய வீடியோக்கள் வெளியான நிலையில் விஷாலுக்கு உடல்நிலை கோளாறு என ஏராளமான வதந்திகள் பரவியது.

ஆனால் அதெல்லாம் கிடையாது காய்ச்சல் காரணமாகத்தான் அன்று அப்படி இருந்தேன் இப்போ என்னோட கை நடுங்கள மைக் ஆடவில்லை என்று மதகஜராஜா படத்தின் வெற்றி விழாவில் கெத்தாக விஷால் பேசி இருந்தார். விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் இவ்வாறு சங்கத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற போது நடிகர் சங்கத்திற்கு தனி கட்டிடம் கட்டிவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்திருந்தார். இன்றும் பலரும் விஷால் எப்போது தான் திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வியை முன்வைத்து வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடத்தை பிறகு கட்டிக் கொள்ளலாம் ரொம்பவும் வயசு ஆவதற்கு முன்பு கல்யாணத்தை செய்ய சொல்லுங்க என்று பலரும் கூறுகிறார்கள்.

இப்படியான நிலையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் சங்க கட்டிடம் எப்போது என்ற கேள்வி விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் விஷால், ஒரு கருத்தை நான் தெரியாமல் சொல்லிவிட்டேன். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு திருமணம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 9 வருடம் ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும் கட்டிட திறப்பு விழாவிற்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் டெக்னீசியன்கள் வரை அனைவரையும் நானே வந்து தனித்தனியாக அழைப்பேன். அனைவரும் பட்டு வேட்டி சேலை அணிந்து ஒரு குடும்ப விழாவாக நினைத்து வரவேண்டும். ஜூன் மாதம் எப்படியாவது கட்டிடத்தை திறந்து விடுவோம்.

ஆனால் என் கல்யாணம் எப்போ நடக்கும் என்று எனக்கு தெரியாது. அது மட்டுமல்லாமல் இனிமேல் வருடத்திற்கு நான்கு படங்களில் நடித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து நடிகர் சங்கத்தில் இருக்கும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் போடப் போகிறேன். தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிட திறப்பு விழா ஆகஸ்ட் 15ஆம் தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கம் என்று இருக்கிறது. அவர்கள் எங்களை அழைத்தால் தான் நாங்கள் பேச முடியும். அவர்கள் தான் முதலாளிகள். என் மீதே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது. தற்போது நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெற உள்ளது. எனக்கும் கல்யாணம் நடக்கணும் பா என்று விஷால் அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

போலீஸ் தாக்குதலா? உடல்நலக் குறைவா?… போலீஸ் ஸ்டேஷன் சென்று திரும்பிய பூசாரி திடீர் மரணம்… குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான இருதரப்பு மோதல் வழக்கில் சிந்தாமணி காவல் நிலைய…

2 minutes ago

“என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”… தோழிகளுக்கு கதறி அழுது ஆடியோ அனுப்பிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு… கல்லூரியில் நிகழ்ந்த கோர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…

12 minutes ago

கெஞ்சிய கர்ப்பிணி பெண்…. நள்ளிரவில் கொடூரமாக கொன்ற 21 வயது காதலன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…

16 minutes ago

திடுக்கிடும் திருப்பம்..! கண்மாயில் கொடூர சம்பவம்… போலீசாரையே குழப்பும் மர்மக் கொலை… நடுங்க வைக்கும் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…

20 minutes ago

“தாய்க்கு அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ்…” மனைவியை கொன்று தற்கொலை செய்த பொறியாளர்…? பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…

24 minutes ago

ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை… தவெக அரசின் அதிரடி பிளான்…. கோயில் நிலங்களில் சோலார் மின்திட்டம்…. மாஸ் காட்டும் முதல்வர் விஜய்….!

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…

28 minutes ago