தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்தான் மகேந்திரன். காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்த அவரை ஒரு விழாவில் எம்ஜிஆர் பாராட்டியதை தொடர்ந்து சினிமாவில் கதை மற்றும் வசனங்கள் எழுத ஆரம்பித்தார். அப்படி அவர் தங்கப்பதக்கம் உள்ளிட்ட படங்களுக்கு கதையும் வசனமும் எழுதினார். தன் அறிமுக காலத்திலேயே எதார்த்தமான படைப்பாளி என்ற பெயரை மகேந்திரன் பெற்றார். தொடர்ந்து அவருக்கு இயக்குனராகவும் வாய்ப்பு விரைவிலயே கிடைத்ததால் இயக்குனர் அவதாரம் எடுத்த இவர் முள்ளும் மலரும் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் ரஜினிகாந்த் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
முள்ளும் மலரும் திரைப்படத்தை தொடர்ந்து உதிரி பூக்கள், மெட்டி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை என ஏராளமான திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் இன்று வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. வயோதிகம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக இயக்கத்தில் இருந்து ஒதுங்கியவர் நடிகராகவும் மாறினார். அதன்படி விஜய் நடித்த தெறி மற்றும் ரஜினிகாந்த் நடித்த பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.
இவருக்கு ஜான் மகேந்திரன் என்ற ஒரு மகனும் உள்ள நிலையில் தனது தந்தையைப் போலவே அவரும் ஒரு இயக்குனர் தான். விஜய்யை வைத்து சச்சின் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதனைத் தவிர பல திரைப்படங்களையும் இயக்கியுள்ள ஜான் மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், எங்க அப்பா எப்போதுமே மலையாளத் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பாரு. அவர் பார்க்கிறதை பார்த்து தான் எனக்கும் மலையாள திரைப்படங்கள் மீது ஆர்வம் வந்தது. அவர் மலையாளத் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ரொம்பவே ஆசைப்பட்டார்.
கடைசியா அவருக்கு ஜெயராம் சார் ஒரு நாள் போன் பண்ணாரு. போனில் சார் நான் ஒரு மலையாள படம் பண்ண போறேன் அது தமிழ்நாட்டில் தான் ஷூட்டிங் நடக்குது நீங்க எனக்கு அப்பா ரோல் பண்ண வேண்டும் என்று கேட்டார். உடனே எங்க அப்பா மகேந்திரன் சரி கட்டாயம் நான் பண்றேன் என்று சொல்லிட்டு அவ்வளவு மகிழ்ச்சியோட போனை வச்சாரு. அந்த சமயத்துல அவருக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று வந்ததும் எப்படி அவர் படத்துல நடிக்க போறார் என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.
ஆனால் ஜெயராம் சார் கிட்ட போன் பேசி வச்சதும் எங்க அப்பா அவ்வளவு சந்தோசமா இருந்ததா அன்னைக்கு தான் நான் பார்த்தேன். பல வருட கனவு நிறைவேற போவதாக நினைத்து அவ்வளவு சந்தோசமாக இருந்தார். ஆனா அன்னைக்கு சாயங்காலமே அப்பாவுக்கு பிரைன் ஸ்டோக் வந்துருச்சு. இத்தனை வருஷமா அப்பா ரசிச்சு பார்த்த மலையாள படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சா சந்தோசத்துல இருக்கும்போது அப்படி நடந்துருச்சு. அடுத்த நாள் ஜெயராம் சார் அசிஸ்டன்ட் போன் பண்ணும் போது நான் விஷயத்தை சொன்னதும் அவங்களே அதிர்ச்சி அடைந்தார்கள். அன்னைக்கு நடந்த அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது என ஜான் மகேந்திரன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…