பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாமல் இருந்தால் தான் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தன் இயக்கிய நேசிப்பாயா, விஷாலின் மதகஜராஜா உள்ளிட்ட படங்கள் வெளியானது. இப்படியான நிலையில் மதகஜராஜா படம் கடந்த 12 வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி கிடந்தது. இத்தனை வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆவதால் இதற்கு வரவேற்பு கிடைக்குமா? என்ற தயக்கமும் படக்குழுவினருக்கு ஏற்பட்டது.

ஆனால் ரிசல்ட் தலைகீழாக மாறியது. இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் சொதப்பினாலும் பொங்கலுக்கு சர்ப்ரைஸ் வின்னராக மாறியுள்ளது. பல வருடங்கள் கழித்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம் என்றால் அது இந்த படம் என்றே சொல்லலாம். அந்த குறைய தீர்க்கும் படமாக பொங்கல் விருந்தாக வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க படமாக மாறி உள்ளது.

