தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் வினய் ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதில் குரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். இருப்பினும் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வர முடியவில்லை. அதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்கின்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அசத்தியிருந்தார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் வினய் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இவர் பிரபல நடிகையான விமலா ராமனை காதலித்து வருகின்றார். நடிகை விமலா ராமன் தமிழ் சினிமாவில் ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பொய் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்த இவர் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கின்றார். இருப்பினும் ராமன் தேடிய சீதை திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. கடைசியாக சுந்தர் சி யின் இருட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
.jpg?$p=8384990&f=16x10&w=856&q=0.8)
நடிகை விமலா ராமனும் நடிகர் வினையும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் காதலிக்க நேரமில்லை பட குழுவுடன் சேர்ந்து ப்ரோமோஷனில் ஈடுபட்ட போது பேசிய நடிகர் வினய்யிடம், நான் ஒரு நடிகராகேன் என்று எனக்கு தெரியாது. ஏதாவது ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போவேன் இல்லனா மார்க்கெட்டிங் உள்ளே சென்று விடுவேன் என்று தான் நினைத்தேன்.

நான் முதன்முதலில் எனக்கு நிறைய பணம் தேவைப்பட்டதால் அதற்காக மாடலிங் பண்ண ஆரம்பித்தேன். நான் நிறைய பார்ட்டி பண்ணுவேன். என்னுடைய சம்பளத்திற்கு மேல் எனக்கு பணம் தேவைப்பட்டது. ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அதுவும் fair and lovely விளம்பரம் தான். முதல் இது எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க என்று நான் வேண்டாம் என சொன்னேன், பிறகு வலுக்கட்டாயமா என்ன அதுல நடிக்க வைத்தார்கள். அந்த விளம்பரத்தை பார்த்துட்டு ஜீவா சார் என்னை கூப்பிட்டு நடிப்புல உனக்கு ஆர்வம் இருக்கா என்று கேட்டார். சரி ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று நானும் சொன்னேன். அப்படியே லைஃப் மாறிடுச்சு என்று வினய் பேசியுள்ளார்.
