‘காசு கேக்குறேன்னு friends கூட போன் எடுக்க மாட்றாங்க’… எமோஷனலாக பேசிய நடிகர் விஷால்… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின்  முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஷால். 2004 இல் வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர்  நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது.

 

   

இதற்கிடையே விஷால் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார்.குறிப்பாக ஆதரவு இல்லாத மாணவ, மாணவிகளின் கல்விக்கு தன்னால் என்ன முடியுமோ அதை தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல் விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்டோருக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்துவருவது பாராட்டை பெற்றுவருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால், அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்திவரும் சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையத்தின் ,

26ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, மக்கள் சேவையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி பேசி, நினைவு பரிசை வழங்கினார். ஏழை எளிய மக்களுக்காக அனைத்து பரிசோதனையும் மிக குறைந்த செலவில் இந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால் ‘லயன்ஸ் கிளப் சார்பில் வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் விஷயம் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எங்களுடைய அறக்கட்டளைக்கும் அவர்கள் நிறைய உதவி செய்திருக்கிறார்கள் என உதவியாளர் ஹரி மூலமாக தெரிய வந்தது. பத்து ரூபாய்க்கு ரத்த பரிசோதனை என்பது சாதாரண விஷயம் அல்ல. இதை நான் வெளியே சென்று சொன்னால் கூட பைத்தியக்காரத்தனமாக பேசாதே, எங்கே நடக்குது இது என்று கேட்பார்கள். இதை வெளி உலகத்தில் உள்ள எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், அதற்கு என் முகம் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்விற்கு வந்துள்ளேன்’ என்று கூறினார். இதைத்தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர்,காசு கேக்கிறேன்னு என் friends கூட போன் எடுக்குறது இல்ல’ என்று எமோஷனலாக பேசியிருந்தார். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by DailyThanthi (@dailythanthinews)