Categories: சினிமா

விஷால் சொன்ன வார்த்தை… இது ஒன்னும் சூட்டிங் ஸ்பாட் இல்ல.. விஷாலை கண்டித்த நீதிபதி..

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஷால். அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரித்தும் வந்துள்ளார். மேலும் விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக மதுரையைச் சேர்ந்த அன்பு செழியன் என்பவரிடம் சுமார் ரூபாய் 21.29 கோடி கடனாக பெற்றுள்ளார். அந்த கடனை விஷால் அவருக்கு திரும்ப செலுத்தவில்லை. எனவே விஷாலுக்கு உதவும் வகையில் லைக்கா நிறுவனம் அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்திருந்தது.

 

இதனால் விஷால் லைக்கா நிறுவனத்திற்கு இந்த கடனை திரும்ப அளிக்கும் வரை விஷால் தயாரிப்பில் வெளியாகும் அனைத்து படங்களையும் அதன் உரிமைகளையும் லைக்கா நிறுவனத்திற்கு தந்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில் விஷால் தயாரித்த வீரமே வாகை சூடும் படத்தின் உரிமையை லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்க மறுத்ததால் அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷாலின் மீது வழக்கு பதிவு செய்தது.

எனவே விஷாலின் மீது உள்ள இந்த வழக்கை நீதிபதி பி. டி உஷா என்பவர் விசாரித்துக் வந்த நிலையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நீதிமன்றத்தில் விஷால் ஆஜராகினார். அப்பொழுது வழக்கறிஞர் விஷாலிடம் குறுக்கு விசாரணை நடத்திய போது லைக்கா நிறுவனம் தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் நீதிபதி நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும் ? என்றும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நிற்கிறீர்களா? என்றும் இந்த விசாரணையானது  சினிமா படப்பிடிப்பிற்கானது அல்ல எனவே கவனமாக பதில் கூறுங்கள் என கூறினார்.

 

இந்த விசாரணை தொடர்ந்து சண்டகோழி 2 படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக பணத்தை திருப்பி தருவதாக நிறுவனத்திடம் கூறினீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். உடனே நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்க முயன்ற விஷால் பாஸ் என ஏதோ கூற தொடங்கியதும் பாஸ் என்றெல்லாம் சொல்லக்கூடாது என்றும் ஆம் , இல்லை என்று மட்டுமே கூற வேண்டும் என்று நீதிபதி மிகக் கடுமையாக விஷாலை கண்டிதுள்ளார்.

 

santhoshinikarthik

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

3 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

3 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

4 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

4 மணத்தியாலங்கள் ago