இயக்குனர் மிஷ்கின் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். அவருடைய இயக்கத்தில் பிசாசு 2 மற்றும் ட்ரெயின் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மிஸ்கின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டில் ராதா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மரியாதை குறைவாக பேசியது அனைத்து தரப்பினரையும் கோபப்பட வைத்தது. கெட்ட வார்த்தை பயன்படுத்தியது மட்டுமல்லாமல் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களை மரியாதை குறைவாக பேசி இருந்த நிலையில் மிஸ்கின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இப்படியான நிலையில் நேற்று பேட் கேர்ள்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கூறிய விஷயங்கள் அனைத்துக்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மிஸ்கின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மிஸ்கினுக்கு இதே வேலையாக போய்விட்டது என்று நடிகரும் நடிகர் சங்க செயலாளர் ஆன விஷால் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் மற்றும் நடிகை சோபனா பத்ம விருதுகளை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்த்து கடிதங்களை அனுப்புவதற்காக தான் நடிகர் சங்கத்திற்கு வந்ததாக விஷால் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்த அவரிடம் மிஸ்கின் குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில் மிகவும் கோபமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில், மிஸ்கின் எப்போதும் இதே போல பேசிவிட்டு அதன் பிறகு அதற்கு வருத்தம் தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். நீங்க தண்ணி அடிங்க ஏதோ வேண்டுமானாலும் பேசுங்க. அனைவருக்கும் பேசுவதற்கு கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் மேடை நாகரீகம் என்று ஒன்று உள்ளது. இளையராஜா கடவுளின் குழந்தை போன்றவர்.
அவரை மரியாதை குறைவாக பேசியதை மன்னிக்க முடியாது. பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஒரு நாள் கழித்து மன்னிப்பு கேட்டதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா. இளையராஜா சாரை அவன் இவன் என்று சொல்வதற்கு யாருக்குமே அருகதையும் அதிகாரமும் கிடையாது. இளையராஜா தனது பாடல்கள் மூலமாக ஒவ்வொருவருடைய ரத்தத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவங்க குடும்பத்தில் இருக்கிற எல்லோரும் எனக்கு ஒரு ஃபேமிலி மாதிரி தான். அவரை இப்படி பேசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று மிஸ்கின் பேசிய வார்த்தைகளுக்கு விஷால் கோபப்பட்டுள்ளார்.
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…