Categories: சினிமா

நான் படம் நடிக்க வந்த முக்கிய காரணமே இதுக்காகத்தான்.. நடிகர் வினய் சொன்ன பதிலைக் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் வினய் ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதில் குரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். இருப்பினும் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வர முடியவில்லை. அதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்கின்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அசத்தியிருந்தார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் வினய் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.  இவர் பிரபல நடிகையான விமலா ராமனை காதலித்து வருகின்றார். நடிகை விமலா ராமன் தமிழ் சினிமாவில் ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பொய் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்த இவர் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கின்றார். இருப்பினும் ராமன் தேடிய சீதை திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. கடைசியாக சுந்தர் சி யின் இருட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகை விமலா ராமனும் நடிகர் வினையும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் காதலிக்க நேரமில்லை பட குழுவுடன் சேர்ந்து ப்ரோமோஷனில் ஈடுபட்ட போது பேசிய நடிகர் வினய்யிடம், நான் ஒரு நடிகராகேன் என்று எனக்கு தெரியாது. ஏதாவது ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போவேன் இல்லனா மார்க்கெட்டிங் உள்ளே சென்று விடுவேன் என்று தான் நினைத்தேன்.

நான் முதன்முதலில் எனக்கு நிறைய பணம் தேவைப்பட்டதால் அதற்காக மாடலிங் பண்ண ஆரம்பித்தேன். நான் நிறைய பார்ட்டி பண்ணுவேன். என்னுடைய சம்பளத்திற்கு மேல் எனக்கு பணம் தேவைப்பட்டது. ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அதுவும் fair and lovely விளம்பரம் தான். முதல் இது எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க என்று நான் வேண்டாம் என சொன்னேன், பிறகு வலுக்கட்டாயமா என்ன அதுல நடிக்க வைத்தார்கள். அந்த விளம்பரத்தை பார்த்துட்டு ஜீவா சார் என்னை கூப்பிட்டு நடிப்புல உனக்கு ஆர்வம் இருக்கா என்று கேட்டார். சரி ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று நானும் சொன்னேன். அப்படியே லைஃப் மாறிடுச்சு என்று வினய் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

8 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

8 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago