காதல் ஜோடிகளாக வளம் வரும் வினய் மற்றும் விமலா ராமன் இருவரும் நீச்சல் குளத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் வினய் ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதில் குரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். இருப்பினும் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வர முடியவில்லை. அதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்கின்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அசத்தியிருந்தார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் வினய் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இவர் பிரபல நடிகையான விமலா ராமனை காதலித்து வருகின்றார். நடிகை விமலா ராமன் தமிழ் சினிமாவில் ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பொய் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்த இவர் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கின்றார். இருப்பினும் ராமன் தேடிய சீதை திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. கடைசியாக சுந்தர் சி யின் இருட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகை விமலா ராமனும் நடிகர் வினையும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.
வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வரும் இவர்கள் தங்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களை பார்த்து ரசிகர்கள் பலரும் எப்போதுதான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் இவர்கள் இருவரும் குளித்து விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.