#image_title
தமிழ் சினிமாவின் இரண்டாம் நிலை நடிகர்களில் ஒருவர் விமல். கூத்துப் பட்டறையில் படித்த இவர் பல படங்களில் துணை நடிகராகத் தோன்றி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பசங்க படம் மூலமாகக் கவனம் பெற்றார். அடுத்தடுத்து அவர் நடித்த களவாணி, வாகை சூடவா மற்றும் தேசிங்கு ராஜா ஆகிய படங்கள் அவரை கவனிக்கத்தக்க நடிகராக்கின.
சில ஆண்டுகளுக்கு முன்னர் விலங்கு என்ற வெப்சீரிஸ் மூலம் அவர் ஓடிடி உலகிலும் கால்பதித்தார். இப்படி வெற்றிகரமாக நடிகராக அவர் வலம் வந்தாலும் அவரால் முன்னணி நடிகராக வரமுடியவில்லை. அதற்கு இடையில் அவர் தேர்வு செய்த சில மோசமான படங்கள்தான் காரணம்.
ஆனால் இப்போது சார் போன்ற படங்களில் நடித்து கம்பேக் கொடுக்க முயன்று வருகிறார். இந்நிலையில் விமல் தன்னுடைய திருமண விஷயத்தில் தான் செய்த ஒரு தவறு பற்றி இப்போது மனம்திறந்து பேசியுள்ளார்.
விமல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள பணங்கொம்பு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த விமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடனம் கற்க தொடங்கினார். சினிமாவில் வாய்ப்பு தேட வேண்டும் என்று சென்னைக்கு குடி பெயர்ந்தார். சினிமாவில் சில படங்கள் நடித்தபோது அவர் தன்னுடைய முறைப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
#image_title
இந்த திருமணத்துக்கு இரு வீட்டாரும் ஒத்துக் கொள்ளாததால் அவர்கள் வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் திருமணம் வெகுசில சினிமா நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. அதுபற்றி பேசியுள்ள விமல் “எங்கள் திருமணத்தில் 10 பேர்தான் கலந்துகொண்டார்கள். அப்போது என் மனைவி மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். நான் கும்பகோணத்தில் ஷூட்டிங்கில் இருந்தேன். ஒரு இக்கட்டான சூழல். அதனால் வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்தை எதிர்பார்க்காமல் திருமணம் செய்துகொண்டோம். ஆனால் இப்போது நினைக்கும்போது காத்திருந்து அவர்கள் சம்மதத்தையும் வாங்கி கல்யாணம் பண்ணி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஆனால் இப்போது வரை நாங்கள் சந்தோஷமாகதான் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…