CINEMA
10 வருஷம் கஷ்டப்பட்டு நடிச்சும் ஒரு அவார்ட் கூட இல்ல… ஆனா ஒரே படத்துக்கு 18 அவார்ட்- ரசிகர்களைப் புல்லரிக்க வைத்த விக்ரம்!
பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம். ஆனால் அது நடக்காததால் அதன் பின்னர் விக்ரம்மை வைத்து சேது படத்தை எடுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
சேது படம் உருவாகி பலராலும் பார்க்கப்பட்டு ஆனால் யாருமே ரிலீஸ் செய்ய முன்வரவில்லை. கிட்டத்தட்ட 100 நாட்கள் அந்த படத்துக்கு ப்ரிவியூ ஷோ போட்டுக் காட்டியுள்ளனர். அப்போது பலரும் இந்த படம் வந்தால் இயக்குனர் நல்ல பெயர் வாங்குவார், ஹீரோவுக்கும் பெரிய பெயர் கிடைக்கும். ஆனால் தயாரிப்பாளர் மாட்டிக்கொள்வார் என சொல்லியுள்ளனர்.
ஆனாலும் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தின் மூலமாக விக்ரம், பாலா, இயக்குனர் அமீர், சசிகுமார் உள்ளிட்ட பலருக்கும் பிரேக் கிடைத்தது. அந்த படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவானார் விக்ரம்.
அதுபற்றி பல ஆண்டுகள் கழித்து பேசியுள்ள விக்ரம் “நான் சேது படத்தைதான் என்னுடைய முதல் படமாக சொல்வேன். அதற்கு முன்னர் நான் 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எனக்கு அந்த படங்களில் எல்லாம் ஒரு விருதும் கிடைக்கவில்லை. ஆனால் சேது படத்துக்கு மட்டும் எனக்கு 18 விருதுகள் கிடைத்தன. நான் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் போய் விருது வாங்கினேன். ஏனென்றால் அது ஒரு ஃபீலிங். அதைப் பெறவேண்டும் எனப்தற்காக அப்படி சென்றேன்” எனப் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சைக் கேட்டு ரசிகர்கள் கைதட்டி நெகிழ்ச்சியாக ஆரவாரம் செய்துள்ளனர்.
அதன் பிறகு பிதாமகன் படத்துக்காக விக்ரம் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.