இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ – சானியா ஐயப்பன், விதார்த்- அபர்ணாதி ஆகியோர் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த படம் இறுகப்பற்று. காதல் மற்றும் குடும்ப கதையில் தமிழ் பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் கடந்த 2023 ஆம் வருடம் அக்டோபர் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படம் நவம்பர் ஆறாம் தேதி ஓடிடியில் வெளியானது.
இந்த நிலையில் இந்த படம் ரிலீஸிற்கு பின்னர் பழைய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விக்ரம் பிரபு, “இறுகப்பற்று படம் ரிலீஸ் ஆகி பயங்கரமாக ரீச் ஆனது. படத்தின் கதையை முடிச்சிட்டு இதனால் 1000 கல்யாணம் Save ஆகும் என்பது தான் பேச்சு. ஆனால் படம் வெளியாகி இரண்டு வாரங்களில் திருச்சி நீதிமன்றத்தில் 38 விவாகாரத்து வழக்கு ட்ராப் ஆனது” என்று கூறியுள்ளார்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…