என்னுடைய தாத்தா சிவாஜி மாதிரி நான் கண்டிப்பா நடிக்க மாட்டேன் – பேரன் விக்ரம் பிரபுவே இப்படி சொல்லிட்டாரே? – ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மார்கழி 21, 2025

Spread the love

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விக்ரம் பிரபு கூறியதாவது, கும்கி படத்தில் ஆரம்பித்த என்னுடைய சினிமா பயணம் 25வது படம் வரை வெற்றிகரமாக வந்துள்ளது. இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நான் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதில்லை. குறிப்பிட்ட சம்பளம் கேட்டு முரண்டு பிடிப்பதில்லை. சினிமாவை நான் ஒரு நல்ல கலையாக நினைக்கிறேன். அதனால் நல்ல படம் நல்ல கதை சிறந்த படக்குழு என்பதில் தான் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன்.

என்னுடைய தாத்தா சிவாஜி கணேசன் கட்டபொம்மன் பாரதியார் வஉசி ஆக நடித்திருக்கிறார். இனி அப்படிப்பட்ட படங்களை எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. காரணம் அதற்கு தனி உழைப்பு தேவைப்படும். அதேபோல் நானும் தாத்தா சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு படத்தில் அவராக நடிக்க மாட்டேன். அதற்கு காரணம் உலகத்தில் ஒரே ஒரு சிவாஜி தான். அவரைப்போல் யாரும் நடிக்க முடியாது. அதனால் அவரை போல நான் நடிக்க மாட்டேன் என்று விக்ரம் பிரபு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.