குரங்கு பொம்மை திரைப்படம் மூலம் கவனம் இருத்தவர்தான் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகந்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் கதை தான் மகாராஜா. கதை வழக்கமானதாக இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு நித்திலன் சுவாமிநாதன் திரைக்கதை எழுதியிருந்த விதமே படத்தை பிளாக் பஸ்டர் வெற்றியாக மாற்றியது . நான் லீனியர் முறை கதை சொல்ல எதிர்பார்க்காத திருப்பங்கள் உணர்ச்சிவசமான கதைகள் என மகாராஜா படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றது.
இந்தி ரசிகர்களிடையே இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக இந்த திரைப்படத்தை இந்தி ரீமேக் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வெறும் 30 கோடியில் எடுக்கப்பட்ட மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை செய்தது. மகாராஜா படத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அரங்கிலும் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அப்படி சீனாவில் மகாராஜா திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் அந்த நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆகி ஒரு மாதம் ஆகியும் நல்ல வசூலை பெற்றுள்ளது.
சீனாவில் மகாராஜா படம் பட்டையை கிளப்பி வரும் நிலையில் இதுவரை 92 கோடிகள் வசூலித்துள்ளது. இவ்வளவு வசூல் செய்தோம் மகாராஜா திரைப்படத்திற்கு என்னமோ கிடைத்தது இரண்டாவது இடம்தான். தற்போது வரை சீனாவில் அதிக வசூலை தந்த இந்திய படம் என்ற பெருமையை அமீர் கான் நடிப்பில் வெளியான Dangal என்ற படம் தான் தக்க வைத்துள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சீன மொழியிலும் திரையிடப்பட்டது. அங்கு சுமார் 107 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…