தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
விஜய்யை திருமலை என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் ரமணா. அந்த படத்தின் விஜய்க்கு அவர் கொடுத்த கெட்டப்தான் விஜய் இப்போது வரை தன் படங்களில் பயன்படுத்தி வருகிறார். விஜய்யின் சினிமா கேரியரில் பல மாற்றங்களைச் செய்த படம் என்று திருமலையை சந்தேகமில்லாமல் சொல்லலாம்.
அந்த படத்தில் வடசென்னை பகுதியைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்காக விஜய் நடித்திருந்தார். அதற்கு முன்புவரை விஜய் ஒரு சாக்லேட் பாயாக, மேல் வர்க்கத்து இளைஞராகதான் நடித்து வந்தார். ஆனால் திருமலை படம் அவரை அக்மார்க் லோக்கல் சென்னைப் பையனாகக் காட்டியது. இதன் தொடர்ச்சியாக அவர் நடித்த கில்லி படம் பெற்ற வெற்றியைப் பற்றி விளக்கத் தேவையில்லை.

#image_title
விஜய் தன்னுடைய படங்களில் காதல் 50 சதவீதம், ஆக்ஷன் 25 சதவீதம், காமெடி 25 சதவீதம் என அதற்கு முன்னர் நடித்து வந்தார். ஆனால் திருமலை படத்தில் அவரின் ஆக்ஷன் காட்சிகள் ஒரு மாஸ் ஹிரோவுக்கு நிகராக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்துக்குப் பிறகுதான் விஜய் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.
அதே போல போல விஜய் மீசை, ப்ளஸ் க்ளின் ஷேவ் லுக்கில் நடித்து வந்த நிலையில் இந்த படத்தில் ஷேவ் பண்ணி ஒரு வார கால தாடி மீசையோடு கெட்டப்பை மாற்றினார். அது ரசிகர்களுக்கு பிடித்துவிடவே அதன் பிறகு பல ஆண்டுகள் அதே கெட்டப்பில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
