தமிழ் சினிமாவின் கிளிண்ட் ஈஸ்ட்வுண்ட் என்று புகழப்பட்டவர் ஜெய்சங்கர். அந்த அளவுக்கு கௌபாய் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன இவர், சில படங்களில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரோடு இணைந்தும் நடித்துள்ளார்.
அப்போது இருந்த சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக இருந்தவர் ஜெய்சங்கர். வாரா வாரம் இவர் படம் ஏதாவது ஒன்று ரிலீஸாகும் என்பதால் இவரை வெள்ளிக்கிழமை ஹீரோ என்ற் பத்திரிக்கைகள் அழைத்தன. அவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஜெய் சங்கருக்கு ரஜினி, கமல் ஆகியொரின் வரவுக்கு பிறகு மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏவிஎம் நிறுவனம் முதல்படமாக முரட்டுக்காளை படத்தை ரஜினியை வைத்து தயாரித்தது. இந்த படத்தை வித்தியாசமாக கமர்ஷியலாகக் கொண்டு செல்லவேண்டுமென ஏவிஎம் நிறுவனம் விரும்பியுள்ளது. அதனால் படத்தின் வில்லன் பவர்புல்லான ஒரு நடிகராக இருக்கவேண்டுமென முடிவு செய்துள்ளார்கள்.

#image_title
ஜெய் சங்கர் கடைசி காலத்தில் பல துண்டு துக்கடா வேடங்களில் நடித்திருந்தாலும் அவரின் தொடக்க காலத்தில் தமிழ் சினிமாவின் ஸ்டலிஷ் ஹீரோவாக வலம்வந்தார். தமிழ் சினிமாவில் விக் வைக்காமல் தன்னுடைய ஒரிஜினல் தலைமுடியோடே நடித்த வெகு சில நடிகர்களில் ஜெய் சங்கர் முக்கியமானவர்.
அவர் அதிகளவில் நடித்த படங்கள் என்றால் கௌபாய் படங்கள் மற்றும் சி ஐ டி வகைப் படங்கள்தான் அதிகம். அதிலும் அவர் துப்பறியும் சி ஐ டி யாக நடித்த பல படங்கள் அப்போது பெரியளவில் ஹிட்டாகின. ஆனால் அதே நேரத்தில் இப்போது அந்த படங்களைப் பார்க்கும் போது அவை சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருக்கும். ஆனாலும் அப்போது மக்கள் அவரை தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என பட்டப்பெயரிட்டு அழைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
