விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்த விஜயகாந்த் சிறுவயதிலேயே மதுரைக்கு குடி பெயர்ந்தார். பிறகு சினிமாவின் மீது இருந்த ஆசையால் படிப்பின் மீது ஆர்வம் காட்டாமல் தந்தையின் அரிசி ஆடையில் சிறு சிறு பணிகளை செய்து வந்துள்ளார்.

அதன் பிறகு சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தால் விஜயகாந்த் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார்.


இவர்களுக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சினிமாவைப் போலவே விஜயகாந்துக்கு அரசியலிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த 2005 ஆம் ஆண்டு தேசியம் முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அதன் நிறுவன தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் விஜயகாந்த் பொறுப்பேற்றார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அரசியலில் பின்னடைவு ஏற்பட அதேசமயம் விஜயகாந்த் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

சிறு சிறு பாதிப்புகளால் விஜயகாந்த் வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

சமீபத்தில் கூட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய்காந்த் இன்னும் வீடு திரும்பவில்லை.

இருந்தாலும் அவர் நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் பிரேமலதா நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 33 வருடங்களாக காதல் குறையாமல் இருக்கும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

