‘இவளாம் ஒரு பொண்ணாடா’.. டாஸ்கில் விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய்.. சூடு பிடிக்க போகும் பிக் பாஸ்..

By Begam on டிசம்பர் 8, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது  பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி ஆனது இன்றுடன் 69 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் களமிறங்க ஆட்டம் சூடு பிடித்தது.

 

   

விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் சண்டைக்கும் பஞ்சமே இல்லை .ஒவ்வொரு நாளும் புது புது சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோவில் பிக் பாஸ் கோல்ட் ஸ்டார் டாஸ்க் ஒன்றை  கொடுத்திருந்தார். இதில்  இந்த ஸ்டாரை பெறுவதற்காக ஹவுஸ் மேட் போராட வேண்டும் அது தங்களுக்காகவும் இருக்கலாம் அல்லது மற்றவர்களை அந்த ஸ்டாரை பெற விடாமல்  இருப்பதற்காகவும் இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

   

 

இதைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஒவ்வொருவரும் அந்த ஸ்டாரை பெறுவதற்காக அடுத்தவரின் குறைகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் விஷ்ணு விசித்ராவை பார்த்து  ‘நீங்க வைக்கிற கருத்து ஒவ்வொன்னும்  முரண்பாடா இருக்கு. நீங்க தப்பா ஒருத்தர ப்ரொஜெக்ட் பண்ணி விளையாடிட்டு இருக்கீங்க’ என்று கூறுகிறார்.

இதைத் தொடர்ந்து விஜய் வர்மா விஷ்ணுவை பார்த்து ‘இவர் செகண்ட் வீக்ல பூர்ணிமாவ பார்த்து இவல்லாம் ஒரு பொண்ணாடா? இவ அடுத்த வீட்டுக்கு போயி என்னடா பண்ண போற? அப்புடின்னு கேட்டாரு.  இந்த மாதிரி ஒரு ஆள் இந்த கேம்முக்கு ஹெல்த்தியே கிடையாது. உன் Game-காக ஒரு பொண்ண எப்டிவேனும்னாலும் project பண்ணுவ’ என்று கூற விஷ்ணு மற்றும் விஜய் இடையே பெரிய சண்டையே வெடித்துள்ள்ளது. இதோ அந்த ப்ரோமோ…