தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். சினிமாவுக்காக இவர் செய்த விஷயங்களை இதுவரை எந்த நடிகரும் செய்யவில்லை என்றே கூறலாம். தனது சிறு வயதிலேயே சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ‘விஜயராஜ்’ என்ற தன் பெயரை விஜயகாந்த் என்று மாற்றினார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமானார்.
வைதேகி காத்திருந்தாள், நூறாவது நாள், வேங்கையின் மைந்தன், சபாஷ் என்று இவர் நடித்து வெற்றி படங்கள் ஏராளம். ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பார் விருதை பெற்றார். நடிகர் விஜயகாந்த் ‘தமிழை தவிர வேற எந்த மொழிகளிலும் நடிக்க மாட்டேன்’ என்று கூறியதை கடைசி வரை காப்பாற்றினார். அவர் நடித்த 150க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்று கூட பிற மொழி கிடையாது.
பின்பு அரசியலில் களம் இறங்கிய விஜயகாந்த் முழு கவனமும் அரசியலில் செலுத்த படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்பொழுது உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவ கவனத்தில் இருக்கிறார். விரைவில் மீண்டும் நலம் பெற்று வருவார் என்று விஜயகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். தற்பொழுது இளம் வயதில் அவருடைய மனைவி பிரேமலதா கோட் போட்டுவிடும் அழகான ரொமான்ஸ் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்….
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…