#image_title
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது முதல் பார்வையிலேயே கவர்ந்து இழுத்து விடுவதில் வல்லவர் இவர். தமிழகத்தையே தனது நடிப்பால் கட்டிப்போட்ட இவர் நேற்று இம்மண்ணுலகை விட்டு பிரிந்து விண்ணுலகை அடைந்துள்ளார்.
சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் இவர் செய்த தர்மங்கள் ஏராளம் .எல்லோரிடமும் அன்பாகவும், அனைவரையும் சரிசமமாகவும் நடத்தக்கூடிய நடிகர் விஜயகாந்தின் மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 150 படங்களுக்கும் மேல் தன் வாழ்நாளில் நடித்த நடிகர் விஜயகாந்த் 2015க்கு பிறகு எந்தவொரு திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதன் தலைவராக மட்டுமே செயல்பட்டு வந்த இவர், அரசியலில் செய்த சாதனைகளும் ஏராளம்.
இதைத்தொடர்ந்து அவர் தனது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுத்து வந்தார். வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண நலம் பெற்று வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதை தொடர்ந்து கொரோனா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு நேற்று காலை 6 மணி அளவில் அவர் மரணம் அடைந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ளது. அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும், தொண்டர்களும் என பலரும் தற்பொழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் கேப்டன் உடலருகே நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு கண்கலங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களையும் கலங்க வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ..
டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…
தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…
அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…
தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…