#image_title
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி தற்போது டாப் லிஸ்டில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் கயல். இந்த சீரியலில் ராஜா ராணி சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்தாரிட்டி நடித்து வருகின்றார். டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியல் குடும்ப பெண்களின் மனதில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதுவும் பிரைம் டைமில் சீரியல் ஒளிபரப்பாகுவதால் கூடுதல் கவனத்தை பெற்றது . அப்பாவை இழந்து மொத்த குடும்ப பொறுப்புகளையும் சமாளித்து வரும் கதையின் நாயகி கயல் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று அவருடைய பெரியப்பா போடும் திட்டம் என தன்னை சுற்றி வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியமான ஒரு பெண்.
இந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சைத்ரா ரெட்டி. பொறுப்பில்லாத குடிகார அண்ணன், காதலில் ஏமாந்த தங்கை என மொத்த பிரச்சனைகளையும் சுமக்கும் ஒரு பெண்தான் கயல். இந்த சீரியலில் கயலுக்கு ஜோடியாக சஞ்சீவ் நடிக்கிறார் .
இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாகவும் பிரபலமானவர். சஞ்சீவ் அந்த சீரியல் மூலமாகத்தான் ஆல்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இந்த சீரியலில் பிரபல நடிகர் விஜய் விஷவா என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் எந்த ரோலில் நடிக்கவுள்ளார் என்பது தெரியவில்லை.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…