“இன்னும் 50 வருஷம் ஆனாலும் இது மாறாது…” விஜய் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சொத்து… முதல்வர் விஜய்யை உருகி உருகி பாராட்டிய வனிதா விஜயகுமார்…

By Visaka on ஆடி 5, 2026

Spread the love

சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் இணைந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வனிதா விஜயகுமார், சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் விஜய் குறித்து நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் விஜய் மீது காட்டிய அன்பும், அவர் நடித்த காதல் படங்களுமே அவர் இந்த உயரத்தை எட்ட முக்கியக் காரணம் என்று குறிப்பிட்ட வனிதா, அவர் இன்னும் 50 ஆண்டுகள் முதல்வராக நீடித்தாலும் மக்கள் அவர் மீது வைத்துள்ள காதல் ஒருபோதும் குறையாது, மாறாக அதிகரிக்கவே செய்யும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், தனக்கு எதிரான எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு, முதல்வர் விஜய் தற்போது ஒரு சிங்கம் போல எதற்கும் அஞ்சாமல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார் என்றும் அவர் புகழ்ந்துரைத்தார்.

தமிழகத்தின் மிகப்பெரிய சொத்தாக விளங்கும் முதல்வர் விஜய்க்கு மக்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று வனிதா கோரிக்கை விடுத்துள்ளார். திரைத்துறையின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் என்பதால், சினிமா துறை சார்ந்த குறைகளை அவர் நிச்சயம் சரிசெய்வார் என்றும், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கடமைகளையும், பொறுப்புகளையும் அவர் மிகச்சிறப்பாக நிறைவேற்றுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். இதே சந்திப்பில் தனது ‘முதல் காதல்’ குறித்த சமூக வலைதளப் பேச்சுக்களுக்குப் பதிலளித்த வனிதா, அது ஒரு அழகான காதல் கதை என்றாலும், அதைப்பற்றி தற்போது வெளியில் பேச முடியாது என்று கூறி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.