Categories: சினிமா

3 நாட்களில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’.. இத்தனை கோடி வசூலா..?

Spread the love

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் மகாராஜா திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது.

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவான படம் மகாராஜா. இந்த திரைப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி 1915க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து திவ்யபாரதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி, அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ஹீரோவாக சிறந்த கம்பேக் திரைப்படமாக இப்படம் அமைந்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். அதாவது மாஸ்டர், விக்ரம் அதைத் தொடர்ந்து பாலிவுட் வெளியான ஜவான் உள்ளிட்ட  திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் மேலும் பிரபலமானார்.

ஜவான் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் ஹீரோவாக கமிட்டான விஜய் சேதுபதிக்கு இந்த திரைப்படம் மிகச்சிறந்த திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்னரே பிரீமியர் சோ வில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்தது.

முதல் நாளே ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சேதுபதிக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு கை கொடுத்திருக்கின்றது. இந்தியா முழுவதும் முதல் நாளில் ஐந்து கோடி வரை வசூல் செய்த இந்த திரைப்படம் உலக அளவில் 7 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்நிலையில் மூன்று நாட்களில் உலக அளவில் மகாராஜா திரைப்படம் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இனிவரும் நாட்களில் இப்படம் எந்த அளவுக்கு வசூல் செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனென்றால் சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தன. இனி வரப்போவது வார நாட்கள் என்பதால் படத்தின் வசூலில் சற்று தொய்வு ஏற்படும் என கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த திரைப்படம் கட்டாயம் 100 கோடி வசூல் செய்யும் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! த்ரிஷா கொடுத்த அதிரடி குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…

9 minutes ago

விலை போனதா மனிதநேயம்..? துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சமையல் கலைஞர் – வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த நண்பர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…

13 minutes ago

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

35 minutes ago

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

38 minutes ago

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

56 minutes ago

“சுற்றுச்சுவர் இல்லை.. கழிவறை இல்லை” அதனால் பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை… அரசுப் பள்ளியின் விசித்திரக் காரணத்தால் வெடித்த சர்ச்சை..!!

பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…

59 minutes ago