மாஸ் காட்டிய விஜய்சேதுபதி.. 2-ம் நாளில் ‘மகாராஜா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

By Mahalakshmi on ஆனி 15, 2024

Spread the love

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவான திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 1915க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு சிறந்த கம்பேகாக அமைந்தது.

   

   

விஜய் சேதுபதியுடன் இணைந்து மம்தா மோகன்தாஸ், அனுரா காஷ்யப், நட்டி, அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். நடிகர் விஜயின் மாஸ்டர், ரஜினியின் பேட்ட, கமலஹாசனின் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்த இவர் இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார்.

 

மீண்டும் பழைய ஃபார்முக்கு ஹீரோவாக நடிக்க தொடங்கிய இவருக்கு மகாராஜா திரைப்படம் ஒரு சிறந்த கம்பேக்காக இருந்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பிரீமியர் ஷோவில் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்தது. முதல் நாளான நேற்று ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இல் 90% ஃபுல்லான நிலையில் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் விஜய் சேதுபதிக்கு இந்த திரைப்படம் கைகொடுத்து வருகின்றது.

இந்தியா முழுவதும் முதல் நாளில் 5 கோடி வரை வசூல் செய்திருந்த இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. மகாராஜா படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கொடுத்து வருவதால் இன்றும் நாளையும் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படம் நிச்சயம் 30 கோடி வரை வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டாவது நாளான இன்று தற்போது வரை 0.11 கோடி வரை வசூல் செய்து இருக்கின்றது. மொத்தமாக இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 4.61 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது