பிரபல பாடகியான மதுஸ்ரீ அலைபாயுதே படத்தின் ஹிந்தி வர்ஷனில் முதல்முறையாக ஒரு பாடலை பாடினார். அவரை பாட வைத்தவர் ஏ ஆர் ரகுமான். மதுஸ்ரீ சிறுவயதில் இருந்து இசை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார். இவர் ராபி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான பிறகு மதுஸ்ரீ மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தமிழில் மதுஸ்ரீயை அறிமுகப்படுத்தியது வித்யாசாகர் தான். ஆஹா எத்தனை அழகு என்ற படத்தில் இடம்பெற்ற நிலாவிலே நிலாவிலே என்ற பாடலை உதித் நாராயணனுடன் இணைந்து மதுஸ்ரீ பாடினார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் சண்டக்கோழி என்ற பாடலை பாடினார்.
அதன் மூலம் அவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் சிம்புவின் காளை படத்தில் இடம்பெற்ற எப்போ நீ என்ன பாப்பா என்ற பாடலை பாடினார். அதன் பிறகு சாந்தனுவின் சக்கரகட்டி படத்திலிருந்து மருதாணி, ஜெய் நடித்த எங்கேயும் எப்போதும் படத்திலிருந்து உன் பெயரை தெரியாது ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
இதே போல மங்காத்தா படத்தில் இடம்பெற்ற என் நண்பனே, சர்வம் படத்தில் இடம் பெற்ற சிறகுகள் வந்தது என்ற பாடல், சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ என்ற பாடலை பாடினார். இவர் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. இது மட்டும் இல்லாமல் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் இடம் பெற்ற வாஜி வாஜி, தீபாவளி படத்தில் இடம்பெற்ற கண்ணன் வரும் வேலை என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் பாடலை பாடியுள்ளார்.