மகனை ஹீரோ ஆக்கிட்டீங்க, அப்புறம் என்ன அடுத்து மகள் ஹீரோயின் தான.. தோலுக்கு மேல் வளர்ந்து நிக்கும் VJS-யின் மகள்…

By Begam on மாசி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார். ஹீரோவாக முதலில் கலக்கி வந்த இவர் தற்போது வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு போல் மாறி நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கின்றார்.

#image_title

தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துவரும் இவர் பான் இந்தியா நடிகராக மாறி இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்து வாக்குல இரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி, விடுதலை, விக்ரம், ஜவான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

   
   

 

இதில் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்பொழுது இவர் வில்லன், ஹீரோ என இரண்டு கதாபத்திரங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.  நடிகர் விஜய் சேதுபதிக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது நாம் அறிந்ததே.

நடிகர் விஜய் சேதுபதியின் மகனும் தற்பொழுது திரைத்துறையில் ஹீரோவாக கால் பதித்துள்ளார். இந்நிலையில் காதலர் தினமான நேற்று நடிகர் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய் சேதுபதியின் மகளா இது..? என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….