Connect with us

CINEMA

“லியோ வெற்றி விழாவிற்கு ஆப்சன்ட், ஆனாஅங்க ப்ரசண்ட்”.. விஜயின் அப்பா எஸ்.ஏ. சி.. எங்க போயிருக்காருனு பாருங்க..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். இவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். 80களில் பெரிய இயக்குனராக இருந்தவர். இவர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். விஜயை அறிமுகம் செய்து சில திரைப்படங்களை இயக்கினார். திரையுலகில் முன்னணி நடிகராக தொழிலில் வளர்ந்து நின்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்பா – அம்மாவுடன் சமூகமற்ற நிலையில் விஜயின் உறவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

   

இவர் தற்பொழுது தந்தை – தாயை பிரிந்து சென்னை நீலாங்கரையில் தனியாக வீடு கட்டி தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். தற்போது விஜய்க்கும், அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பெரிதாக பேச்சுவார்த்தை கிடையாது. இந்நிலையில் தளபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. உலகம் முழுவதும் ரிலீசான முதல் நாளே 148.5 கோடி வசூலித்து சாதனையும் படைத்தது. 250 முதல் 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 12 நாள் முடிவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூவித்துள்ளது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகமாகும் என்றும் கூறி வருகின்றனர்.

எனவே நேற்று லியோ வெற்றி விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 6000 பேர் கலந்துகொள்ள நிகழ்ச்சி நடந்தது. நடிகர் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் லியோ வெற்றி விழாவில் கலந்து கொள்ளாமல்  ஸ்ரீரடி செல்வதாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இதோ அவரின் வைரல் பதிவு….

Continue Reading

More in CINEMA

To Top