திரையுலகில் இசை அமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்பொழுது நடிப்பிலும் கலக்கி வருகிறார். இவர் ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தற்பொழுது பல படங்களில் நடித்த வருகிறார். இவர் நடித்த ‘நான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு திரை உலகில் சிறந்த நடிகர் என்ற ஒரு அடையாளத்தையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்தது.
இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. நடிகர் விஜய் ஆண்டனியின் ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மீரா, லாரா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 17 வயது மகள் லாரா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாராவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் லாரா இறப்பிற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மனஅழுத்தத்திற்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…