தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி மகள்…! இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

By Begam on புரட்டாதி 19, 2023

Spread the love

திரையுலகில் இசை அமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்பொழுது நடிப்பிலும் கலக்கி வருகிறார். இவர் ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தற்பொழுது பல படங்களில் நடித்த வருகிறார். இவர் நடித்த ‘நான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு திரை உலகில் சிறந்த நடிகர் என்ற ஒரு அடையாளத்தையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்தது.

   

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.  நடிகர் விஜய் ஆண்டனியின் ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மீரா, லாரா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   17 வயது மகள் லாரா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார்.

   

 

 

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாராவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் லாரா இறப்பிற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மனஅழுத்தத்திற்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.