தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் , இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவருடைய இயக்கத்தில் இறுதியாக பிச்சைக்காரன் திரைப்படம் வெளியானது. இசையமைப்பாளராக இருந்து பிறகு நடிகராக என்ட்ரி கொடுத்த விஜய் ஆண்டனி பல வித்தியாசமான படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்து காட்டினார். விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த மாதம் இறுதியில் ஹிட்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். கௌதம் மேனன் மற்றும் சரண்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களும் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 27ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தை புரொமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு விஜய் ஆண்டனி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள், வில்லன் நடிகர்கள் ஹீரோவானதை பார்த்திருப்போம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இசையமைப்பாளர்களும் ஹீரோக்களாக மாறியுள்ளனர். விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்யாசமான படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியுடன் நடித்து வருகின்றார்.
இவர் சினிமாவில் படம் எடுக்கும்போது நடிகராக மட்டுமல்லாமல் எடிட்டிங் மற்றும் புரொடக்சன் என சில வேலைகளையும் இவரை பார்த்து பார்த்து செய்கிறார். அதற்கு விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி, உங்கள் குழந்தையை நீங்கள்தான் சாப்பாடு ஊட்டுவதில் இருந்து மற்ற அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். முடியாத சூழலில் வேறு யாரிடமாவது பார்த்துக் கொள்ள சொல்லலாம்.
இருந்தாலும் நீங்கள் பார்த்துக் கொள்வது போல் வராது. அதனைப் போல் தான் சினிமாவிலும், நம்முடைய படத்தில் நமக்கு தோன்றும் இந்த இடத்தில் இது இருந்தால் சரியாக இருக்கும் என்பது போல எனக்கு அந்த படத்தில் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று தோன்றும். அதற்காகத்தான் நானே எடிட்டிங் முதல் சில வேலைகளை செய்து கொள்கிறேன். பொதுவாக ஒரு படத்தில் 100 பேர் வேலை செய்வார்கள். அதில் நானும் ஒருவனாக வேலை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.