தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான D56 படத்தின் பூஜை சிவகங்கையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. லப்பர் பந்து படத்தை இயக்கி கவனம்பெற்ற தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் இத்திரைப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷும் வடிவேலுவும் இணைந்துள்ளதால் சினிமா ரசிகர்களிடையே இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படபூஜை நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, இத்தனை ஆண்டுகள் இருவரும் சேர்ந்து நடிக்காததன் பின்னணியில் இருந்த அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தினார். திரையுலகில் தங்க இருவருக்கும் இடையே தீப்பொறியை வைத்து, தீப்பந்தத்தையே கொளுத்திப்போட்டு தங்களைப் பிரித்து வைத்ததாக அவர் பரபரப்பாகக் குற்றம்சாட்டினார். மேலும், இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனுஷுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
இத்திரைப்படம் எந்தவிதமான அரசியல் பின்னணியும் இல்லாத முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது என்றும், கதையைக் கேட்டபோது தான் மிகுந்த ஆச்சரியமும் பெருமையும் அடைந்ததாகவும் வடிவேலு கூறினார். ஏற்கனவே ‘மாப்பிள்ளை’ படத்தில் இணைந்து நடிக்கவிருந்து மனஸ்தாபத்தால் பிரிந்த இவர்கள், தற்போது மீண்டும் ஒன்றிணைந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில்
