கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக இருப்பவர் நடிகர் உபேந்திரா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் உபேந்திரா கூறியதாவது, கூலி படத்தில் நான் ஒரு சிறிய வேடத்தில் நடித்தது ஏன் என்று பலரும் என்னை கேட்கிறார்கள். கூலி படத்தில் நான் நடித்த கேரக்டர் ரஜினியின் அடியாள் போல் இருந்ததாக ரசிகர்கள் பெரிய அளவில் ட்ரோல் செய்தார்கள். என்னை பொறுத்தவரை ரஜினியின் படம் என்பதால் மட்டுமே கூலி படத்தில் நடித்தேன்.
நான் அவரது தீவிரமான ரசிகன் என்பதால் அவருடன் நடிக்க வேண்டும் என்பது ஒரு கனவாகவே எனக்கு இருந்து வந்தது. கூலி படத்தில் முதலில் ஒரு சண்டைக்காட்சியில் மட்டுமே என்னை நடிக்க அழைத்தார்கள். ஆனால் பிறகு அந்த ரோலை பெரிதுபடுத்தினார்கள். என்னை பொறுத்த வரை ரஜினி படத்தில் ஒரு சின்ன சீனில் நடிப்பதை கூட பெரிய மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன் என்று நடிகர் உபேந்திரா கூறியிருக்கிறார்.
