தன்னைவிட 22 வயது குறைவான பிரபல நடிகையின் மகளுக்கு ஜோடியாக நடிக்கும் சூர்யா.. ஷாக்கான ரசிகர்கள்..

By Mahalakshmi on தை 17, 2024

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் நடிக்கும்  சூர்யா, இந்தத் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கோங்காரா உடன் இணைகிறார். அந்த திரைப்படத்தில் அதிதி சங்கர், துல்கர் சர்மான், விஜய் வர்மா  போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.  இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக போகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா தான் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

   

அதாவது இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தில் பிசியாக இருப்பதால் அது முடிந்தவுடன் வாடிவாசல் திரைப்படம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.இப்படி பல படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் சூர்யா தற்போது பாலிவுட் இயக்குனருடன் கூட்டணி வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

   

 

பாலிவுட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் மகாபாரத படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாலிவுட்டை கலக்கி வரும் முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

45 வயதை கடந்த நிலையிலும்  இளமை மாறாத நடிகர் சூர்யா தன்னை விட 22 வயது குறைவான நடிகை ஜான்வி கபூருடன் ஜோடியாக இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.