தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரின் மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாவது பாகமும் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது.
இத்திரைப்படத்தை முடித்தபிறகு சுதா கொங்கரா உடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படம் ஆகியவற்றில் சூர்யா நடிக்க இருக்கிறார். சூர்யா மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் நிலையில் சமீபத்தில் அகரம் அறக்கட்டளை விழாவில் பங்கேற்க சூர்யா சென்னை வந்து இருந்தார்.
இந்நிலையில் மும்பை ஏர்போர்ட்டுக்கு சூர்யா மகனுடன் வந்து இருக்கிறார். அப்போது பத்ரிக்கையாளர்கள் அவரை போட்டோ எடுக்க வந்த போது சூர்யா ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.’மகனை போட்டோ எடுக்காதீங்க’ என சூர்யா கேட்க, போட்டோகிராபர்களும் சரி என கூறி சூர்யாவை மட்டும் போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர். இதோ இது தொடர்பான வைரல் வீடியோ….
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…