சினிமாவை தாண்டி புதிய பிஸினஸில் இறங்கிய சூர்யா.. சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க போட்ட திட்டமா..?

By Begam on மார்கழி 27, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்பொழுது இவரின்  மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

Surya

   

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

   

 

இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நடிகர் சூர்யா, சினிமா மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும் கால்பதித்துள்ளார். அதாவது, இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) T10 என்பது இந்தியாவின் முதல் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியாகும். இது 2024 ஆம் வருடம் மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

#image_title

19 போட்டிகள் நடைபெறும் இந்த லீக்கில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், மும்பை மற்றும் ஸ்ரீநகர் என ஆறு அணிகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் சென்னை அணியின் உரிமைத்தை பிரபல நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இதனை அவரே தனது X தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அவரின் பதிவு…