Connect with us

CINEMA

ஹீரோவான 3 படங்களிலும் நடிகர் சூரிக்கு அடித்த ஜாக்பாட்… உலகளவில் தமிழ் சினிமாவிற்கு தேடித்தந்த பெருமை…

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த ஒரு நல்ல காமெடி நடிகர் சூரி. இவர் காமெடி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹீரோவாக அவதாரம் எடுத்து தற்பொழுது கலக்கி வருகிறார். அவரது காமெடி காட்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

#image_title

இவர் தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படம் மூலம் ஹீரோவாக தற்பொழுது களமிறங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது நடிகர் சூரி ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

   

இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் இயக்கத்தில்  நடிகர் சூரி ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இத்திரைப்படத்தில்  மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்பொழுது தற்பொழுது நடிகர் சூரி ஹீரோவாக நடித்த 3 திரைப்படங்களுமே சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

#image_title

அதாவது இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. மற்றொரு பிரபலமான ரோட்டார் டாம் திரைப்பட விழாவில் ராம் இயக்கத்தில் சூரி நடித்துள்ள ‘ஏழுமலை ஏழு கடல்’  திரைப்படமும், அதே திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கி சூரி நடித்த ‘விடுதலை’ படமும் திரையிடப்பட உள்ளதாம். இதனால் தற்பொழுது நடிகர் சூரி பயங்கர மகிழ்ச்சியில் உள்ளாராம்.

Continue Reading

More in CINEMA

To Top