#image_title
தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.
ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
எதுவும் வொர்க் அவுட் ஆகாததால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமாவது அவருக்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார். இப்போது தனக்கான இடத்துக்காக அவர் போராடி வருகிறார்.
#image_title
இந்நிலையில் தன் சினிமா வாழ்க்கையில் தான் எடுத்த சில தவறான முடிவுகளால் திரைவாழ்க்கை அதலபாதாளத்துக்கு சென்றது பற்றி பேசியுள்ளார். அதில் “அப்போது நான் ரோஜாக் கூட்டம் நடித்துவிட்டு அடுத்த படத்துக்காகக் கதை கேட்டுக் கொண்டிருந்தேன்.என்னை சசி சாரிடம் அறிமுகப்படுத்திய ஸ்டான்லி சொன்ன கதை எனக்கு பிடித்ததால் ஜி கே பிலிம்ஸில் அவரை அறிமுகப்படுத்தினேன். அவர்கள் கதைக் கேட்டு அவரை இயக்குனராக ஒப்பந்தம் செய்தார்கள்.
அப்போதுதான் லிங்குசாமி சார், ரன் கதையோடு வந்தார். அதைக் கேட்ட தயாரிப்பாளர்கள் இந்த படம் கண்டிப்பாக ஹிட் ஆகும். அதனால் இந்த படத்தைப் பண்ணலாம் என்றார்கள். ஆனால் நான் தர்மப்படி நடக்கவேண்டும் என்பதற்காக நான் வாக்குக் கொடுத்திருந்த ஸ்டான்லியின் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் நடித்தேன்.
நான் செய்த தவறு இரண்டு படத்திலுமே நடித்திருக்க வேண்டும். ஆனால் நான் ரன் படத்தை வேண்டாம் என்று சொல்லி ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டேன்” எனப் பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…