Categories: சினிமா

ஜப்பானில் களைக்கட்ட தொடங்கிய நெப்போலியன் மகன் திருமண கொண்டாட்டம்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!

Spread the love

நடிகர் நெப்போலியன் 16 வயதில் இருந்து அரசியலில் இறங்கி 27 வயதில் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார்.

அதிலும் கலைஞர் கருணாநிதியின் தீவிரமான தொண்டராகவும் ரசிகராகவும் அவரை பின்பற்றி வந்த நெப்போலியன் சினிமாவில் அறிமுகமான ஒரு சில ஆண்டுகள் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவியேற்றார். இதனிடையே ஜெயசுதா என்பவரை நெப்போலியன் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஆனால் அவருடைய மூத்த மகன் தனுசுக்கு நான்கு வயது இருக்கும் போதே தசை சிதைவு நோய் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை எடுப்பதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி தன்னுடைய மகனுக்காக குடும்பத்தோடு நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

அங்கு ஐடி நிறுவனம் ஒன்றை நெப்போலியன் நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயமும் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது மகனுக்கு 25 வயதாகும்போது திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தல் நெப்போலியன் அவருக்காக பெண் தேடி வந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு நிச்சயதார்த்தம் செய்தார்.

இரு வீட்டார் சம்மதத்தோடு வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனைத் தொடர்ந்து திருமணம் ஜப்பானில் இன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இதற்காக கடந்த மாதமே நெப்போலியன் குடும்பத்தினர் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு பயணம் செய்தனர்.

நெப்போலியன் மகன் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி கொலை… கொல்லப்பட்ட ரௌடி மதன் யார்?… நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் போல நுழைந்த திகில் பின்னணி……!

சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…

8 minutes ago

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி…. டார்க் வெப்பில் கசிந்த லட்சக்கணக்கானோர் டேட்டா?…. உங்க அக்கவுண்ட் சேஃபா?… திடுக்கிடும் தகவல்….!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…

21 minutes ago

விராலிமலையில் விஜயபாஸ்கரின் மாஸ் என்ட்ரி…. அதிமுகவை அதிர வைத்த செங்கோட்டையன் அறிவிப்பு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…..!

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.…

27 minutes ago

டிசம்பருக்குள் செம ஜாக்பாட்….. 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை… அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு….!

தமிழகத்தில் தகுதியுள்ள முதியோர்களுக்கு உதவும் வகையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று…

30 minutes ago

திடீர் பரபரப்பு… நாதக வேட்பாளர் கார்த்திகா கைது…. வீதியில் இறங்கும் சீமான்…. தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்….!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் துறையினரால்…

35 minutes ago