மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. அந்தத் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். படத்தில் அவரை பார்த்த பலரும் இந்த நடிகைக்கு இதுதான் முதல் படமா என்று ஆச்சரியப்படும் வகையில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். இவர் ஒரு சிறந்த நடிகை என்பது மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸரும் கூட. விஜய் டிவியில் நடந்த நடனம் தொடர்பான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட அவர் போட்டியாளராக பங்கேற்றார். பிறகு சினிமாவுக்குள் நுழைந்தார். போலிகளை உடைத்த நாயகி. இறுதியாக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்த இந்து கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.
இந்த நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சூர்யாவுடன் NGK படத்தில் நடித்த அனுபவம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் முதலில் என் ஜி கே செட்டுக்கு வந்த போது, நான் நன்றாக இருக்கிறேனா இல்லையா என்று சொல்ல முடியாமல் மிகவும் சங்கடமாக இருந்தேன். ஒவ்வொரு ஷார்ட்டுக்கும் பிறகு செல்வா சார் சரியா இல்லையா என்பதை உறுதிப்படுத்த மாட்டார். அப்போது செல்வாவின் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்று தனுஷ் என்னை கூப்பிட்டு கேட்டார்.
நான் என் கவலையை தெரிவித்தேன். உடனே தனுஷ் கவலைப்படாதே அவர் எங்களை சோதிக்கிறார் விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி என்னை சமாதானப்படுத்தினார். மூன்றே நாளில் படத்தை விட்டு போயிடலாம் இது வேண்டாம் என்று எனக்கு தோணுச்சு. ஒரு நாள் நைட் புல்லா டேக் எடுத்துக்கிட்டு இருந்தப்போ திடீர்னு பேக் அப் சொல்லிட்டாரு. எத்தனை டேட் போனாலும் ஓகேன்னு சொல்ல மாட்டாரு. படத்தோட கதை சுத்தமா புரியல நடிக்க வேணாம்னு நினைச்சேன்.
அதுக்கப்புறம் நான் செட்டுக்கு வந்ததும் எந்த கமெண்டும் சொல்லாமல் எல்லா ஷாட்டுக்கும் செல்வா சார் ஓகே ன்னு சொல்லிட்டாரு. படத்துல சூர்யா கூட திட்டி சண்டை போடற சீன் எனக்கு சுத்தமா வரல. அப்போ எல்லாம் அடுத்தடுத்த டேட் போய்கிட்டே இருந்தாங்க. என்னால முடியாம ஒரு கட்டத்துல விலகிடலாம்னு நெனச்சேன். பிறகு தனுஷ் சார் கிட்ட பேசினதுக்கு அப்புறம் செல்வா சார் எதுவுமே சொல்லாம நடிச்ச எல்லா டேக்கும் ஓகேன்னு சொல்லிட்டாரு. பிறகு தான் எந்த டென்ஷனும் இல்லாம அந்த படத்துல நடிச்சு முடிச்சேன் என்று சாய்பல்லவி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…
மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…
திமுகவுக்கு எதிரான குதிரை பேர வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆடியோ சர்ச்சை…