தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானவர்தான் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற முடியாத நடிகராகவே இருந்து வருகின்றார். ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு முன்பாகவே கே பாலசந்தர் இயக்கிய ஜன்னல் மரபு கவிதை என்ற சீரியலில் ஸ்ரீகாந்த் அறிமுகமானார். அதன் பிறகு தான் சசி இயக்கத்தில் ரோஜா கூட்டம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் மற்றும் பார்த்திபன் கனவு போன்ற திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் குறிப்பாக பெண்கள் மனதை கொள்ளை அடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவருடைய கேரியரில் இந்த திரைப்படங்கள் தான் இதுவரை மிகச் சிறந்த திரைப்படமாக அமைந்துள்ளன. அதன் பிறகு வெளியான அனைத்தும் ஸ்ரீகாந்துக்கு தோல்வியாக தான் அமைந்தது. பிறகு சசி இயக்கத்தில் பூ திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்த நிலையில் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு நண்பனாக ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு எங்கு போனார் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஸ்ரீகாந்த் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்ரீகாந்த், முதலில் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து தான் எல்லோரும் நடிப்பு கத்துக்கிட்டாங்க. இங்கதான் ஸ்டூடியோஸ் அதிகமா இருந்துச்சு.

ஆனா இன்னைக்கு ஹைதராபாத்தில் 25 ஸ்டூடியோஸ் இருக்கு. இது மிகவும் வருத்தமான விஷயம் தான். தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சிக்கும் தனியா ஆபீஸ் இருக்கு. ஆனால் நடிகர் சங்கத்திற்கு இல்லை. இது கவலைப்படக்கூடிய விஷயம். எல்லோரும் இரண்டு கட்சியா பிரிஞ்சிட்டாங்க. எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் சினிமா துறையை காப்பாற்றுவோம். இன்னைக்கும் சம்பளம் உயரவில்லை. கடைசியா நடிச்ச படத்துல கூட பத்து லட்சம் ரூபாய் பாக்கி இருக்கு. முழுசா ஒரு படத்துக்கு எனக்கு சம்பளம் வந்துட்டா அதை தயாரிப்பாளர்களுக்கு நானே எடுத்துக் கொடுத்து இருக்கேன். நம்பளால் முடிந்த அளவுக்கு சினிமா துறையை காப்பாற்றுவோம்.

எனக்கு பட வாய்ப்பு வந்துட்டு இருக்கு நானும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறேன். 48 மணி நேரத்தில் வெறும் 7 மணி நேரம்தான் தூங்கி இருக்கேன். ஒவ்வொரு ஊரு அங்கு இங்கேயும் மாறி மாறி போய்கிட்டே இருக்கேன். இன்னைக்கு ரஜினி, தளபதி விஜய் மற்றும் அஜித்துக்கு விசில் அடிச்சுட்டு இருக்கும். ஆனா கடின உழைப்பை போடக்கூடிய இயக்குனர்களுக்கு என்ன பாராட்டு கிடைக்கிறது. நம்முடைய சினிமா துறையை மேலும் உயர்த்த அதிகமாக ஸ்டுடியோஸ் ஏற்படுத்த முடியுமா என்று பார்ப்போம். வந்தவங்க எல்லாருக்கும் சினிமா வேலை கொடுத்து இருக்கு. எனக்கு இன்னும் வேலை கொடுத்துகிட்டு தான் இருக்கு. நடுவுல ஒரு படம் பிளாக் ஆனாலும் கூட அடுத்ததாக இன்னொரு வாய்ப்பு வந்துருது. முடிந்த அளவிற்கு சினிமாவிற்கு நம்பளால் முடிந்ததை செய்வோம் என்ற ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.
