பிரபல நடிகையான ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மூத்த மகள் ஜான்வி கபூர். தனது திரை பயணத்தை ஆரம்பித்து விட்டார். இவர் முதலில் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இளம் வயதிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஜான்வி கபூர். தற்போது தென்னிந்திய சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்கும் தேவாரா திரைப்படத்தில் ஜான்விகபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதனையடுத்து ராம்சரணின் 16வது திரைப்படத்திலும் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். சமீபத்தில் தனது தந்தை போனி கபூருடன் ஜான்வி கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரது கழுத்தில் இருந்த நெக்லஸில் Shiku என எழுதி இருப்பதை நெட்டிசன்கள் பார்த்துள்ளனர்.

இதன் மூலம் Shikhar Pahariya தான் ஜான்வி கபூரின் காதலன் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். மேலும் ஜான்வி கபூர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

