மொத்த சினிமாவையும் அலற விட்டு ஆளே அடையாளம் தெரியாமல் காணாமல் போன நடிகர் ஸ்ரீ.. திடீரென அவரே வெளியிட்ட வீடியோ..!

By Nanthini on சித்திரை 18, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ஹீரோவாக வளர்ந்து நிற்கும் நடிகர்தான் ஸ்ரீராம். ஸ்ரீராம் நடராஜன் என்பதுதான் இவருடைய முழு பெயர். சினிமாவுக்காக ஸ்ரீ என வைத்துக்கொண்டார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அந்தத் தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் ஸ்ரீ.. 37 வயதிலேயே இப்படி ஒரு நிலைமையா? | Kana Kaanum Kaalangal Fame Actor Shri's Latest Photos Shock Fans on Social Media - Tamil Oneindia

   

இதனை தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 /9 திரைப்படம் தான் இவர் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சோன்பப்படி, வில்லம்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் வில்லம்பு திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து பெயர் வாங்கிக் கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஸ்ரீ நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.

   

Actor Sree Latest Photo Goes Viral | நடிகர் ஸ்ரீ

 

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் நான்கு நாட்களிலேயே தாக்குப் பிடிக்க முடியாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடந்த 2003 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான இறுக்கப்பற்று என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ஆகும். அதன் பிறகு ஸ்ரீ நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் சமீப காலமாக இவரைப் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இவரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

Maanagaram Film Fame Actor Sri Current Condition Latest News Why Is He In Distress What Happened To Him Check His Viral Photos | ஆளே மாறிப்போன பிரபல நடிகர் ஸ்ரீ இதுதான் காரணமா அவரே போட்டிருக்கும்

அதுவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்ட வீடியோ மூலமாகத்தான் இவருடைய தற்போதைய நிலை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருக்கின்றார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கூட இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தான் கூறி வருகின்றனர். மறுபக்கம் வில்லம்பு திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு சரியான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்ரீ எங்கு இருக்கிறார் என்று அனைவருமே தேட தொடங்கி விட்டனர்.

ஆள் அடையாளம் தெரியாத மாதிரி நடிகர் ஸ்ரீ... அதிர்ச்சியிலும் வருத்ததிலும் ரசிகர்கள்! - Touring Talkies

ஸ்ரீ பற்றி பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்க தற்போது நடிகர் ஸ்ரீ ஒரு  வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஹலோ மக்களே.. நான் புகை பிடிப்பதை விட்டு இன்றோடு ஒரு வருடம் நான்கு மாதங்கள் 16 நாட்கள் ஆகின்றது. அதற்காகத்தான் இந்த வீடியோ. இதை சொல்வதன் மூலமாக நான் மிக மிக சந்தோசம் அடைகிறேன். சிரித்துக் கொண்டிருங்கள். தொடர்ந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று பேசி உள்ளார். மேலும் புகைப்பிடிப்பதை விடுவதற்கு முதல் 90 நாட்கள் சர்க்கரை கலந்த பிளாக் காபியை பயன்படுத்தினேன். ஆகையால் புகைப்பிடிப்பதை விடுவதற்கு நீங்களும் முயற்சி செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Shriram Natarajan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@shri_blueticked)