தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் இறுதியாக GOAT திரைப்படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் விக்கிரவாண்டி நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் விக்கிரவாண்டியில் ஹோட்டல் அறைகள் முழுவதும் நிரம்பி வழிவதால் வீடுகளில் வாடகைக்கு எடுத்து தொண்டர்கள் தங்கி உள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி சாலைப் பகுதியில் நாளை நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சியின் பொதுச் செயலாளரான பிஸ்ஸி ஆனந்த் விஜயின் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு வருகின்றார். சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. நாளை மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் 100 அடி கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார். இதனைத் தொடர்ந்து விஜயின் மாநாட்டுக்கு நடிகர் நடிகைகள் உட்பட தொண்டர்கள் பலரும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சௌந்தர்ராஜன் விஜயின் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து சைக்கிளில் கிளம்பியுள்ளார்.
தனது சக நண்பர்களுடன் சேர்ந்து அவர் சைக்கிளில் புறப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே சமயம் அவர் TVK விஜய் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய் TVK கொடியை கையில் ஏந்திய பிறகு உலக அளவிலேயே முதல் ஆளாக அந்த கொடியை கையில் தொட்டது நான்தான். பிகில் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்த போது அவருடைய தம்பியாகவே நான் உணர்ந்தேன். அதே சமயம் மேடையில் அவர் என்னை பற்றி சில வார்த்தைகளை பேசும்போது நான் அவருக்கு திரும்ப என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். விஜயின் தீவிர ரசிகன் நான்.
நான் கட்சிக்காக செய்யும் செயல்கள் அவரை போய் சென்றால் மகிழ்ச்சி. நான் செய்வதை அவரும் கவனித்துக் கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். கட்சியில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை ஆனால் தம்பி என்ற உரிமையில் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இப்போது விஜய் மாநாட்டுக்கு சௌந்தர்ராஜன் சைக்கிளில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.