இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. அது பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. அதில் ஒரு இடம் தான் மாலுதி கோயில்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்குவங்க எல்லையில் அமைந்துள்ள ஒரு பழங்குடியின கிராமம் என்று அழைக்கப்படுகிற மாலுதியில் 72 பாலடைந்த டெரகோட்டா கோவில்களின் குழுமமாக இருக்கின்றன. இதைப் பற்றி இனி காண்போம்.

இந்த மாலுதி கோயில்கள் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் 400 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது. இந்த மாலுதி கோவில்களில் டெரகோட்டா சிற்பங்கள் பெங்காலி டெரகோட்டா கலைஞர்களின் திறமைக்கு சான்றாக இருக்கின்றன. முறையான பராமரிப்பு மற்றும் அரசின் முன்னெடுப்பு இல்லாத காரணத்தால் இந்த கோயில்கள் முழுவதும் அழிவின் விளிம்பில் இருக்கிறது.
பாஜ் வசந்தா வம்சத்தின் மன்னர்கள் இந்த மாலுதி கோயில்களை கட்டியிருக்கின்றனர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த மாலுதி தலைநகராக இருந்திருக்கிறது. அவர்களின் குல தெய்வமான மௌலாக்ஷி தேவியை மையமாக வைத்து இந்த கோவிலை கட்டியிருக்கிறார்கள்.
மௌலாக்ஷி தேவி மட்டுமல்லாது சிவன் துர்கா காளி விஷ்ணு ஆகிய தெய்வங்களின் கோவில்களும் இங்கு இருக்கின்றது. இந்த இடத்தில் முதலில் 108 கோவில்கள் இருந்ததாம். முறையாக பராமரிக்காதாலால் அனைத்தும் அழிந்து 72 கோயில்கள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றது.

வங்காளம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்த வங்காள கட்டிடக்கலையை பயன்படுத்தி இந்த மாலுதி கோயில்கள் கட்டப்பட்டிருக்கிறது. மகாபாரதம் ராமாயணம் காட்சிகள் மற்றும் கிராமத்தின் காட்சிகள் ஆகியவற்றை இங்கு சிறப்பாக செதுக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது இந்த மாலுதி கோவில்கள் குளோபல் ஹெரிடேஜ் பண்ட் ஆகியவற்றின் கீழ் இதை பராமரிப்பது பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுத்தால் இது மாதிரி பாரம்பரிய கோயில்கள் என்றென்றைக்கும் நம் வரலாற்றை எடுத்து சொல்வதற்காக நிற்கும். உலகில் 12 மறைந்து வரும் கலாச்சார பாரம்பரிய இடங்களில் இந்த மாலுதி கோயில்கள் இடம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
